ஐ.டி To ஆடை வடிவமைப்பு, ஷைனி ‘ஷைன்’ ஆன கதை!

ஓர் ஐடியா உங்கள் வாழ்வை மாற்றிடுமே!எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: தி.விஜய்

“இப்ப எனக்கே எனக்குன்னு ஒரு கஸ்டமர் கூட்டம் உருவாகியிருக்கு. அவங்க ஒவ்வொருத்தரும்  என்மேல உறுதியான நம்பிக்கை வெச்சிருக்காங்க. அவங்களுக்காகத்தான் இப்படி பரபரப்பா ஓடிட்டிருக்கேன்!” - தீர்க்கமாகப் பேசுகிறார் ஷைனி.

‘Fascino - tutu for princess’ என்கிற முகநூல் பக்கத்தைப் பின்தொடர்பவர்களுக்கு ஷைனியை அறிமுகப்படுத்தத் தேவையில்லை. 4.8 ஸ்டார் ரேட்டிங்குடன் ஒரு லட்சம் ஃபாலோயர்களைக்கொண்ட அந்தப் பக்கத்தில்  அணிவகுக்கும் பெண் குழந்தைகளுக்கான ‘tutu’ (ஒருவகையான பிரத்யேக ஆடை ரகம்) ஆடைகள், முழுக்க முழுக்க கைகளாலேயே தயாரிக்கப்பட்டவை. இந்தியாவில் பலர் ‘டூட்டூ’ ஆடைகள் தயாரித்தாலும், ஷைனியின் கைவண்ணத்தில் ஒரு பிரத்யேகத்தன்மை இருக்கிறது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிசைன்களை உருவாக்கி ‘டூட்டூ’ ஆடை வடிவமைப்பில் மிளிரும் ஷைனி, தொடர்ந்து அம்மா - பெண்ணுக்கான ‘காம்போ பிரின்சஸ்’ உடைகளை வடிவமைக்க ஆரம்பிக்க, அதற்கும் இப்போது அமோக வரவேற்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick