“என் தங்கையின் மரணத்துக்கு நீதி கேட்கிறேன்!” - அரசுப் பணியை உதறிய சபரிமாலா

உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா! ஜெ.முருகன், படங்கள்: எஸ்.தேவராஜன்

னசு முழுக்க மருத்துவக் கனவு தேக்கிப் படித்தார் பெரம்பலூர் மாவட்டம், குழூமூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழை வீட்டுப் பெண் அனிதா. ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 1176/1200 மதிப்பெண் எடுத்தும், 196.75/200 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்தும், கனவு கைகூடும் வேளையில், ‘நீயெல்லாம் மருத்துவராக முடியாது போ’ என்று அவரைத் தள்ளியது ‘நீட்’ என்கிற அநீதி. அதைத் தாங்கிக்கொள்ள முடியாத அந்தப் பிஞ்சு மனம் தற்கொலை முடிவெடுத்து, தமிழகத்துக்கே குற்ற உணர்ச்சியையும், போராட்டத் தூண்டுதலையும் தந்து சென்றது.

அனிதாவுக்காகவும், மாநிலப் பாடத்திட்டத்தில் படிப்பதால் மருத்துவ வாய்ப்பு பறிபோய்விடக்கூடாதென நாளைய அனிதாக்களுக்காகவும் தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தன. அதன் ஓர் அங்கமாக, அரசுப் பள்ளி ஆசிரியப் பணியையே துறந்த சபரிமாலா, அனைவரின் கவனத்தையும் பெற்றார். விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியம், வைரபுரம் ஊராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர், அதே பள்ளியில் படிக்கும் தன் மகனுடன் சேர்ந்து போராட்டத்தில் அமர்ந்தார். அதற்குக் கல்வித்துறை அனுமதி மறுத்ததால், தனது பணியை ராஜினாமா செய்தார். இன்றுவரை தனது முடிவில் உறுதியோடு இருந்து, விமர்சனங்களைத் தைரியமாகச் சந்தித்துவருகிறார். திண்டிவனம், ஜக்கம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சபரிமாலாவைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick