பெண்மையைக் கொண்டாடுவதே நவராத்திரி!

கொலுக் கோலாகலம்ஆர்.வைதேகி, படம்: ப.சரவணகுமார், உதவி: ஜ.காவ்யா

`அழகிய சிங்கர்' ஷோபனாவுக்கு இது ஸ்பெஷல் நவராத்திரி. டிசம்பரில் சங்கீத சீசனுக்கான அதே முனைப்புடன், நவராத்திரிக் கச்சேரிகளுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார் ஷோபனா. சென்னையில்  உள்ள அவரது வீடும் இப்போதே கொலுக் கோலம் கொண்டிருக்கிறது. ஷோபனாவின் நவராத்திரி நினைவுகளுடான நவரசப் பேட்டி இது...

``சின்ன வயசுல யார் வீட்டுக் கொலுவுக்குப் போனாலும் பாட்டுப் பாடச் சொல்வாங்க. கொலுவுக்குப் பாடறதுக்காகவே பஜன்களும் பாடல்களும் கத்துக்கிட்ட அந்த நாள்கள் இன்னும் எனக்குள் பசுமையா இருக்கு. இன்றும் அந்த இசையும் கொலு அனுபவங்களும் எனக்கு அதே குதூகலத்தையே கொடுக்கின்றன.  நவராத்திரின்னா பாட்டுனு சொல்லிக்கொடுத்த என் பெற்றோரும் ஆசிரியர்களும் அதோட வரலாறும் சொல்லிக் கொடுத்தாங்க.

நவராத்திரியின்போது, அம்பிகையின் பேரில் ஸ்தோத்திரங்கள் படிக்கிறது மிகவும் உகந்தது. அதிலும் சண்டி சப்தசதி பாராயணம், லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி, மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகங்கள், ஸ்ரீசூக்தம், துர்கா சப்தசதி போன்றவை மிகவும் சக்தி வாய்ந்தவை. தேவி பாகவதம் பாராயணம் செய்வது நவராத்திரியின்போது மிகவும் விசேஷம். ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதரின் நவாவரணக் கீர்த்தனைகள், அத்வைத வேதாந்தத்தின் அடிப்படையில் மனித உடலில் அமைந்துள்ள ஒன்பது தியானயோக சக்கரங்களின் விவரணத்தை உள்ளடக்கியவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick