அணிலாடும் முன்றில் காண ஆசை!

வித்தியாசம் ஆர்.வைதேகி

‘அ’ எழுத கற்றுக் கொடுக்கும்போதே அணில் என்கிற அழகிய உயிரினத்தையும் அறிமுகப்படுத்திய காலம் இன்றில்லை. அகரவரிசைக்கான உதாரணங்கள் மாறிப்போன மாதிரியே, அணில்களும் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அடுத்தவருக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத அப்பாவி ஜந்துக்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. மின்மினிப்பூச்சிகளும் சிட்டுக்குருவிகளும் தெரியாமலே வளர்ந்துகொண்டிருக்கிற இந்த தலைமுறையினரைத் தொடர்ந்து அடுத்த தலைமுறை அணிலை அருங்காட்சியகத்தில் தான் பார்க்க வேண்டும்போல.

செல்லப்பிராணிகளின் ஆர்வலரும் மிருகங் களைப் படம் எடுக்கும் போட்டோகிராபருமான சூர்யா தின்கர், அணில்களைக் காக்கும் அவசர முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். ‘இந்திய அணில் பாதுகாப்பு இயக்கம்’ என்கிற இவரின் இந்த முயற்சியால் மீண்டும் அணிலாடும் முன்றில்கள் தோன்றினால் மகிழ்ச்சி.

``முன்பெல்லாம் காலையில பொழுதுவிடிஞ்சு எழுந்திருக்கும்போது ஜன்னல்லயும் தோட்டத் துலயும் அத்தனை அணில்கள் ஓடியாடி விளையாடறதைப் பார்க்கலாம். இப்ப அணில்னா என்னன்னே தெரியாத அளவுக்கு கிட்டத்தட்ட அந்த இனமே அழிஞ்சிட்டிருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick