சீதை பிறந்த மண்ணில் நவராத்திரி கோலாகலம்!

ஆச்சர்யம் யாழ் ஸ்ரீதேவி

வராத்திரி... பெண்களின் பெருமை போற்றும் பெருவிழா; பெண் தெய்வங்களுக்குப் பெண்கள் எடுக்கும் திருவிழா. ஒன்பது தினங்களைக் கோலாகலமாக்கும் இவ்விழா, இந்தியாவின் பல மாநிலங்களிலும் மட்டுமல்ல, தாய்லாந்து நாட்டிலும் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

பல நாடுகளிலிருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருக்க, தாய்லாந்து மகா மாரியம்மன் கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவைக்காணக் கண்கோடி வேண்டும். மகா மாரியம்மன் திருவீதி உலா வரும் வைபவத்தைத் தரிசிக்க மட்டுமே மூன்றரை லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதில் இருந்தே, இவ்விழாவின் சிறப்பு நமக்குத் தெரியவரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick