வைரம் வாங்கப் போறீங்களா? | Things to Look for while Buying Diamond jewels - Aval Vikatan | அவள் விகடன்

வைரம் வாங்கப் போறீங்களா?

இதையெல்லாம் அறிந்து கொள்வோம்!ஷாப்பிங் கைடுஎம்.ஆர்.ஷோபனா, படங்கள்: மீ.நிவேதன்

பொதுவாக, தங்க நகைகள் வாங்கும்போது `எப்படி வாங்க வேண்டும்; எதையெல்லாம் கவனிக்க வேண்டும்’ என்பதில் பலருக்கும் அனுபவம் இருக்கலாம். ஆனால், வைர நகை விஷயத்தில் அந்த அனுபவம் குறைவாகவே இருக்கும். வைரம் வாங்கும்போது என்னனென்ன விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும், எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார் சென்னை கீர்த்திலால்ஸ் ஜுவல்லர்ஸின் இயக்குநர் சீமா மேத்தா.

வைர நகைகள் வாங்கும்போது கட், கலர், கிளாரிட்டி, காரட்டேஜ் ஆகியவற்றைக் கவனத்தில்கொள்ள வேண்டும். இவை, வைரத்தின் தரத்தை நிர்ணயிக்கும் முக்கியக் காரணிகள்.

*   கட் (Cut) என்பது ஒரு வைரத்தை வடிவமைத்திருக்கும் விதம். இதை விற்பனையாளர்கள் எக்ஸலன்ட், வெரிகுட், குட் எனத் தரம் பிரித்து வகைப்படுத்துவார்கள்.

*   கலர் (Color) - ஒரு வைரம் எந்த அளவுக்கு நிறமற்று இருக்கிறதோ, அந்த அளவுக்குத் தரமாக இருக்கிறது என்று அர்த்தம். ஆங்கில எழுத்துகளின் D, E, F, G, H, I எனத் தொடங்கி Z வரை வைரத்தின் நிறத்தை மதிப்பிடுவார்கள். இதில், D என்பது மிகச்சிறந்த தரம். Z  என்பது மோசமான தரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick