ஜிமிக்கி - காதோரம் கதைகள் சொல்லும்!

ஷாப்பிங் வெ.வித்யா காயத்ரி, படங்கள்: வீ.நாகமணி

ஜிமிக்கி... பெண்மையின் வசீகரத்தைத் தன் முத்துகளில் கோத்தாடும் ஆபரணம் (`ஓ... ‘ஜிமிக்கி கம்மல்’ ட்ரெண்டில் வந்த கட்டுரையா’னு கண்டுபிடிச்சவங்களுக்கு ஹை ஃபைவ்!). இந்த நளினமான நகையை உலகுக்குக் கொடுத்தவர்கள், நம் தென்னிந்தியப் பொற்கொல்லர் பூட்டன்கள் (யெஸ்... அதுவும் நம்ம பயகதேன்!). ஒரு சின்ன காதணி, அதில் கவிழ்த்த மணி வடிவத்தில் தொங்கும் தொங்கட்டான், அதன் விளிம்பு முழுக்க தங்க முத்துகள்... இதுதான் ஆதிகாலத்து ஜிமிக்கியின் அசல் வடிவமைப்பு (அம்ப்ரெல்லா ஜிமிக்கி எல்லாம் அப்புறம்தாம்ப்பே!). பின்னர் கல் ஜிமிக்கி, முத்து ஜிமிக்கி முதல் ஹூக் ஜிமிக்கி, க்வில்லிங் ஜிமிக்கிவரை அதன் வடிவமைப்பு மெருகேறிக்கொண்டே வந்திருப்பது வரலாறு (மேல் கம்மல், தொங்கட்டானைவிட எப்பவும் சின்னதாதான் இருக்கணும்ங்கிறது, ஜிமிக்கி ஜுவல் மேக்கிங் விதியாம் #verified!).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்