ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எம்.ஜி.ஆருடன் முதல் சினிமாஎஸ்.கிருபாகரன், படங்கள் உதவி: ஞானம்

ன் அரசியல் குருவான எம்.ஜி.ஆர் உடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்த பட வாய்ப்பும் ‘வெண்ணிற ஆடை’ படத்தயாரிப்பில் இருந்தபோது வந்ததுதான்.

தமிழிலும் கன்னடத்திலும் சிறந்த படங்களை இயக்கி புகழ்பெற்றிருந்த பந்துலு, அப்போது ஒரு தமிழ்ப்படத்தின் தோல்வியினால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார். `எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுத்தால், மீண்டும் கரையேற முடியும்' என நண்பர்கள் அவருக்கு அறிவுரை சொன்னார்கள். பந்துலுவுக்கு மனதில் ஆசையிருந்தாலும், தொடர்ந்து சிவாஜி படங்களை இயக்கியவர் எனப் பெயரெடுத்திருந்ததால்,      எம்.ஜி.ஆரிடம் செல்ல ஒரு தயக்கம் இருந்தது.

விஷயத்தைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர், பந்துலுவின் திறமை மீதிருந்த மரியாதை காரணமாக  தாமாகவே முன்வந்து அவர் படத்தில் நடிப்பதாக நண்பர்கள் மூலம் தகவல் அனுப்பினார். எம்.ஜி.ஆருக்கு அட்வான்ஸ் தர நண்பர்கள் சிலரிடம் சில ஆயிரங்களைக் கடனாகப் பெற்றுச் சென்றார் பந்துலு. ``எவ்வளவு வேண்டும்?’’ என்றார் பந்துலு. ``ஒரு ரூபாய் கொடுங்க’’ என்றார் எம்.ஜி.ஆர். பதறிப்போனார் பந்துலு. பதற்றத்துக்குக் காரணம், சினிமா உலகில் ஒரு ரூபாய் என்றால், ஒரு லட்சம். ஆனால், பந்துலுவைக் கட்டிப்பிடித்தபடி எம்.ஜி.ஆர் சொன்னார், “பயந்துட்டீங்களா, நான் கேட்டது நிஜமாகவே ஒரு ரூபாய்தான். அதுவும்கூட ஒருவேளை பின்னாளில் நான் மனம் மாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான்” என்றார். நெகிழ்ந்து நின்றார் பந்துலு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick