“விஜய் மேஜிக் கைகொடுக்கும்!”

மெர்சல்னாலே ஸ்பெஷல்தான்ஆர்.வைதேகி, படங்கள்: பா.காளிமுத்து

து பி.சுசீலா பாடியது, இது எஸ்.ஜானகி பாடியது, இது சித்ரா பாடியது... இப்படிக் குரலை வைத்துப் பாடகர்களை அடையாளம் காண்கிற நிலை இன்றில்லை. எல்லா குரல்களும் ஒரே மாதிரி ஒலிக்கின்றன. பெரும்பாலான குரல்களில் தனித்துவம் இல்லை. விதி விலக்குகளை விரல்விடாமலேயே எண்ணிவிடலாம். பின்னணிப் பாடகி பூஜாவின் குரலும் அந்த விரல் களின் எண்ணிக்கையில் இருக்கும்.

‘பார்க்காதே... பார்க்காதே...’ என மெலடியில் கரைவதிலாகட்டும், ‘எப்போ மாமா மாமா ட்ரீட்டு’ என ஃபாஸ்ட் பீட்டிலாகட்டும்... பூஜாவின் குரல் தனித்து ஒலிக்கும். விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலிலும் பூஜாவின் குரல் தனித்துவத்துடன் ஒலிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick