இனி வேண்டாம் அழுகாச்சி!

சிரி சிரி சிரிவிக்னேஷ் சி செல்வராஜ்

‘சீரியல் பார்த்தால் கண்ணைக் கசக்குவது சகஜம்தானே' என்று சொல்வதெல்லாம் பழங்காலம் மக்களே! இப்போதெல்லாம் சீரியலோ, பேய் படமோ விழுந்துவிழுந்து சிரிப்பதுதான் லேட்டஸ்ட் ட்ரெண்ட். இப்படி சத்தமே இல்லாமல் நகைச்சுவைக்காகவே சில தொடர்கள் உலக லெவலில் ஹிட் அடித்து இருக்கும் நேரத்தில் உலக அளவில் ஹிட் அடித்த சில நகைச்சுவை டி.வி நிகழ்ச்சிகளைப் பற்றிச் சும்மா தெரிஞ்சுக்கலாம் வாங்க!

தி பிக் பேங் தியரி (The Big Bang Theory)

சி.பி.எஸ் (CBS) சேனலில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஒளிபரப்பாகும் இந்த சிச்சுவேஷன் காமெடி சீரியல் ஆரம்பத்தில் சுணக்கமாக இருந்தாலும் பிறகு, பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரு அதிமேதாவி நண்பர்கள்,  இரண்டு பொதுப்புத்தி கொண்டவர்கள் மற்றும் ஒரு மீடியாவுக்குச் செல்ல விரும்பும் பெண் என இவர்கள் ஒரே அப்பார்ட்மென்ட்டில் இருக்கும்போது அவர்களது வாழ்க்கை எப்படியிருக்கும் என நகைச்சுவையாகச் சொல்லும் இந்த சீரியலில், காமெடி கியாரண்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick