“நயன்தாரா மாதிரி நல்ல நடிகை ஆகணும்!”

ஆர்.வைதேகி

ர்வசி மாதிரியே சிரிக் கிறார்... ஊர்வசி மாதிரியே சிணுங்குகிறார்... ‘மகளிர் மட்டும்’ படத்தில் ஊர்வசியின் சின்ன வயது கேரக்டரில் நடித்த வந்தனா சேச்சிக்குப் பூர்வீகம் கொச்சினாம்.

‘`யாரை மாதிரி வேணா நடிச்சிடலாம். ஆனா, ஊர்வசி மேடம் மாதிரி நடிக்கிறது ரொம்பக் கஷ்டம். ரிகர்சல் டைம்ல ரொம்ப கஷ்டப்பட்டேன். ‘ஊர்வசி மேடத்தை அப்படியே காப்பி பண்ணாதீங்க. அவங்க மேனரிசம்ஸைக் கவனியுங்க. அதை உங்க ஸ்டைல்ல பண்ணுங்க’னு சொல்லிட்டாங்க. இது எனக்கு முதல் படம். `சொதப்பிடக்கூடாதே'ங்கிற பயத்துலயே நடிச்சேன். படம் பார்த்தவங்க எல்லாரும் பாராட்டறாங்க... கனவா, நினைவான்னே தெரியலை...’’ - நிறைய சிரிப்பும் கொஞ்சம் பேச்சுமாக ஈர்க்கும் வந்தனா, எம்.ஏ. சோஷியாலஜி மாணவி.

‘`ஸ்கூல் படிக்கிறபோதே மாடலிங்லயும் நடிப்புலயும் ஆர்வம் உண்டு. நிறைய விளம்பரங்களுக்கு மாடலிங் பண்ணியிருக்கேன்.  என் போட்டோஸ் எப்படியோ நாகர்கோயில்ல ஒரு கோ-ஆர்டினேட்டர் கையில சிக்கியிருக்கு.  அவங்க  போன் பண்ணி, `பிரம்மானு ஒரு டைரக்டரோட படத்துக்கு ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு வர முடியுமா'னு கேட்டாங்க. ‘இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் வந்தனா’னு உடனே ஓகே சொன்னேன். பிரம்மா சாரே கொச்சினுக்கு வந்தார். அவர்கூட பிரபல மேக்கப் மேன் பட்டணம் ரஷீது சாரும் இருந்தார். அவர்தான் எனக்கு ஜூனியர் ஊர்வசி மாதிரி மேக்கப் பண்ணினார். பிரம்மா சார் சில சீன்ஸ் கொடுத்து நடிச்சுக் காட்டச் சொன்னார். எல்லாம் முடிஞ்சது. ‘சொல்லியனுப்பறோம்’னு கிளம்பிட்டாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick