என் தோற்றம்... என் பெருமிதம்... காற்றைப் போல நான் எழுவேன்! | Serena Williams wins the life against the racist - Aval Kitchen | அவள் விகடன்

என் தோற்றம்... என் பெருமிதம்... காற்றைப் போல நான் எழுவேன்!

மு.பிரதீப் கிருஷ்ணா

வெற்றியின் உச்சத்துக்கு ஆண் செல்லும்பட்சத்தில் வெற்றியும் திறமையுமே அடையாளம். தோற்றம், பின்புலம், கடந்தகாலம் எதுவும் பெரிய விஷயமில்லை.

பெண்ணுக்கு? திறமை, வெற்றி, புகழ் அனைத்தையும் தாண்டி அவளுக்கான வேறோர் அடையாளத்தை இந்த உலகம் தேடிக்கொண்டே இருக்கிறது. போராட்டங்கள் பல கடந்து சாதித்தவளுக்கும் தோற்றம், நிறம், அழகு போன்ற விஷயங்களே அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன.

செரீனா வில்லியம்ஸ்... மகளிர் டென்னிஸின் தங்க மங்கை. 39 கிராண்ட் ஸ்லாம்கள், 4 ஒலிம்பிக் தங்கங்கள், 85 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை என செரீனாவுக்கு அங்கீகாரம் கொடுத்த இந்த உலகம், சங்கடங்களையும் சேர்த்தே அளித்தன. கருப்பு என்கிற காரணத்தால் சிறுவயதிலேயே டென்னிஸைத் துறக்க நிர்பந்திக்கப்பட்ட இவர், அத்தனை சோதனைகளையும் மீறி வெற்றி பெற்றார். ஆனால், இந்தச் சமூகம் அவர் நிறத்தின்மீது இனவெறியைப் பாய்ச்சியது.  இன்னும் பாய்ச்சிக்கொண்டே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick