“பேங்க் வேலையை விட்டுட்டு பொட்டீக் ஆரம்பித்தேன்!” | Profitable Boutique business by Common woman Lakshmi - Aval Vikatan | அவள் விகடன்

“பேங்க் வேலையை விட்டுட்டு பொட்டீக் ஆரம்பித்தேன்!”

மாதம் லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் லட்சுமிவே.கிருஷ்ணவேணி, படங்கள்: ப.சரவணகுமார்

‘`ஆறு வருஷம் பேங்க்ல வேலை பார்த்தேன். ஆனாலும், ‘இது உன் ஏரியா இல்லை’னு மனசு சொல்லிட்டே இருந்துச்சு. ஒரு சுப முகூர்த்த நாள்ல வேலையை விட்டுட்டேன்’’ - சுவாரஸ்யமாகப் பேசுகிறார், சென்னை அண்ணா நகரில் உள்ள ‘பிளண்ட் அண்ட் ஸ்டைல்’ பொட்டீக் உரிமையாளர் லட்சுமி. தொழில் தொடங்கிய நான்கு  ஆண்டுகளுக்குள் லட்சங்களில் மாத வருமானம் பார்க்கும் ஸ்மார்ட் உழைப்பாளி!

``படிக்கிற காலத்துல எல்லோருக்கும் டீச்சர், டாக்டர், இன்ஜினீயர் என எதிர்காலத்தில் என்ன ஆகணும் என்று மனசுக்குள் ஒரு குறிக்கோள் இருக்கும். அப்படிப் படிச்ச படிப்புக்கேற்ப நினைச்ச வேலை கிடைச்சு, செட்டில் ஆகிடுவாங்க பலர். சிலருக்கு, அதுக்கு அப்புறம்தான் தங்களோட ஆர்வம் வேறு ஏதோ என்பது அழுத்தமா புரிய ஆரம்பிக்கும். அப்படித்தான் எனக்கும். ஆறு வருஷம் தனியார் வங்கியில் ரிலேஷன்ஷிப் மேனேஜரா வேலை பார்த்துட்டு இருந்த எனக்கு, ‘நமக்கு ஹெச்.ஆர் ஸ்கில்ஸ் இருக்கு. நம்மால தனியா ஒரு நிறுவனத்தை நடத்த முடியும்’னு மனசுக்குள்ள ஓர் ஆரோக்கியமான குரல் கேட்க ஆரம்பிச்சது. என்னை நானே கண்டுபிடிச்சதை வீட்டில் சொன்னப்போ, ‘ரொம்ப கரெக்ட். உன்னால முடியும்’னு சப்போர்ட் பண்ணினாங்க. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick