கனவுகளை ஏன் பூட்டிவைக்க வேண்டும்? | Sheryl Sandberg - one of the World's 20 Most Powerful Women - Aval Vikatan | அவள் விகடன்

கனவுகளை ஏன் பூட்டிவைக்க வேண்டும்?

ரோல் மாடல்ர.சீனிவாசன்

ரு பெண் இந்தச் சமூகத்தில் என்ன செய்துவிட முடியும்? பதின்பருவம் வந்தவுடனேயே அவளைச் சுற்றி இரும்புச் சங்கிலிகள் முளைத்துவிடுகின்றன. வெகுசிலர் மட்டுமே அந்த இரும்பையும் வளைத்து உடைத்து சுதந்திரப் பறவையாகி, கூண்டுகளை விட்டு வெளியே வருகின்றனர். அப்படி வந்த ஓர் அச்சமில்லாத பருந்துதான் ஷெரில் சாண்ட்பெர்க்!

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற துறைகளில் பெண்களால் சோபிக்க இயலாது என்கிற அரை வேக்காட்டுத்தனத்தை வேருடன் பிடுங்கி எறிய முற்பட்டுக்கொண்டிருக்கும் பெண்களில் முதல் வரிசையில் ஷெரில் சாண்ட்பெர்க் நின்றுகொண்டிருக்கிறார். தொழில்நுட்ப உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்களை  ஆண்டுதோறும் வரிசைப்படுத்தும் ஃபார்ச்சூன் (Fortune) இதழில் ஷெரில் இதுவரை ஆறுமுறை இடம்பெற்றிருக்கிறார். இணையத்தில் செல்வாக்கு மிகுந்த இருபத்தைந்து பெண்களில் ஒருவர், ஃபோர்ப்ஸ் (Forbes) இதழின் உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவர், 2012-ம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை அறிவித்த 100 செல்வாக்கு உடைய மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர் என ஷெரில் நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் ஏட்டிலும் எண்களிலும் அடங்காதவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick