நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுகொள்ள வேணாமே!

நீதிக்குப் பின்னே...கு.ஆனந்தராஜ், படங்கள்: ரா.வருண் பிரசாத்

``சமூக நலன் சார்ந்த புரட்சிகரமான தீர்ப்புகளை வழங்கி, மாற்றங்கள் உருவாவதற்கான தூண்டுகோலை மக்கள் கைகளில் கொடுப்பவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன். அக்கறையும் அதிரடியுமாக இவர் வழங்கிய தீர்ப்புகள் ஏராளம். ``என் கணவரின் சமூகம் குறித்த சிந்தனைகள் குடும்பத்தினருடனான உரையாடல்களில் இருந்துதான் தொடங்குகின்றன’’ என்று புன்னகையுடன் ஆரம்பிக்கிறார் கிருபாகரனின் மனைவி எழில்.

“நான் எம்.ஏ, எம்.ஃபில் முடிச்ச நேரம், ‘எவ்வளவு ஃபீஸ் கொடுத்தாலும் கிரிமினல் மற்றும் விவாகரத்து வழக்குகளுக்கு வாதாட மாட்டார்... ரொம்ப நல்ல வக்கீல்’னு இவரைப் பத்தி பாசிட்டிவ் கமென்ட்ஸோட வரன் வர, `டபுள் டிக்’ போட்டுச் சம்மதம் சொன்னேன். 1995-ல் எங்களுக்குக் கல்யாணம் ஆனப்போ, இவருக்குப் பத்து வருட வழக்கறிஞர் பணி அனுபவம் இருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் நெடும்பிறை கிராமத்தைச் சேர்ந்த இவர், அரசுப் பள்ளியிலதான் படிச்சார். சட்டப்படிப்பு படிக்க சென்னை வந்தவர், தொடர்ந்து வக்கீலாகப் பணியைத் தொடர்ந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick