மிஸ் தமிழ்!

புதிய தளம்எம்.ஆர்.ஷோபனா, படம்: சி.ரவிக்குமார் 

பிற மாநிலப் பெண்கள் ஆதிக்கம் செலுத்திவரும் மாடலிங் உலகில், தமிழ்ப் பெண்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கச் செய்யும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறது ‘உலகத் தமிழ் வம்சாவளி’ அமைப்பு. இதற்கான தளமாக ‘மிஸ் தமிழ் யுனிவர்ஸ்’ என்கிற போட்டி, வரும் ஜனவரியில் நடைபெறவுள்ளது. சிங்கப்பூர், மலேசியா, நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ்ப் பெண்களுக்கான பொதுஅறிவு, திறமை, அழகு ஆகியவற்றின் அடிப்படையில், ‘மிஸ் தமிழ் சிங்கப்பூர்’, ‘மிஸ் தமிழ் மலேசியா’, ‘மிஸ் தமிழ் நார்வே’ போன்ற போட்டிகளின் தொடர்ச்சியாக தமிழகத்தில் வசிக்கும் தமிழ்ப் பெண்களுக்கான, ‘மிஸ் தமிழ்ச் சென்னை’ போட்டி, சென்னையின் ‘லீ ராயல் மெரிடியன்’ ஹோட்டலில் நடைபெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick