கோவை ஜாலி டே.... தில்லு ப்ளஸ் லொள்ளு!

இரா.குருபிரசாத், தி.ஆதிரை படங்கள்: க.விக்னேஸ்வரன், ல.அகிலன்

வள் விகடன் மற்றும் ‘கோல்டு வின்னர்’ இணைந்து நடத்திய ‘ஜாலி டே’, பவர்டு பை அபிராமி அரிசி வகைகள்...

வாசகிகளுக்கு விருப்பமான இந்தத் திருவிழா கோயம்புத்தூரில் அக்டோபர் 7, 8 தேதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

முதல் நாள் முன்தேர்வுப் போட்டிகள் டாடாபாத்தில் உள்ள சிருஷ்டி மஹாலில் நடைபெற்றன. ‘அவள் விகடன்னா தில்லு, கோவைன்னா லொள்ளு’ என `லூட்டி'யும் `நாட்டி'யுமாகக் கல்லூரிப் பெண்கள் கலந்துகொள்ள, அவர்களுக்கு டஃப் ஃபைட் கொடுக்கிற அளவுக்கு ஹோம் மேக்கர்களும் சீனியர் பெண்மணிகளும் பங்கேற்றுக் கலக்கினர். நிகழ்வுக்கு வந்திருந்த அவள் வாசகியான ஆசிரியை ப்ரியாவை இன்ஸ்டன்ட் நிகழ்ச்சித் தொகுப்பாளராக்கி, நாம் சர்ப்ரைஸ் கொடுக்க, போட்டிகளைச் சீராக எடுத்துச்சென்றார் அவர். ‘நடனப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு என் டான்ஸ் ஸ்கூலில் இலவசமாக நடனம் கற்றுத்தருகிறேன்’ என நடுவர் களில் ஒருவரான விக்னா ஜான் அறிவிக்க, மேடை அடி தூளானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick