மொபைல் போன் நண்பனா... எதிரியா? | Vikatan Survey on Mobile phone usage of Children - Aval Vikatan | அவள் விகடன்

மொபைல் போன் நண்பனா... எதிரியா?

‘பிரிக்க முடியாதது எதுவோ?’ என்றொரு கேள்வியைக் கேட்டால், ‘மொபைல் போனும் குழந்தைகளும்' என்பதே இந்தக் கால பெற்றோர் பலரின் பதிலாக இருக்கும். அந்த அளவுக்குக் குழந்தைகளை ஈர்த்து, தன்னகத்தே கட்டிவைத்துக் கொண்டிருக்கின்றன மொபைல் போன்கள். பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன், வீட்டு வாசலுக்கு வந்து நிற்கும் கடைசி நொடி வரையிலும்கூட மொபைலில் கேம் விளையாடும் குழந்தைகள் ஏராளம். `வீட்டுப்பாடம் முடித்த பின்தான் போனைத் தருவேன்' எனக் கண்டித்தால், முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்வது, தப்பும் தவறுமாக வீட்டுப் பாடத்தைக் கிறுக்கிவைப்பது என்று குழந்தைகளின் மனநிலையே முற்றாக மாறிப்போய்க் கொண்டிருக்கிறது. உறவினர் யாரேனும் வீட்டுக்கு வந்தவுடன் நம் வீட்டுக் குழந்தைகள் அவரிடம் பாய்ந்து சென்று பறித்துக் கொள்வது சாக்லேட் பாக்ஸை அல்ல... அவர் பாக்கெட்டில் இருக்கும் ஸ்மார்ட் போனைத்தான்.

வீடியோ கேம் விளையாடுவது, நண்பர்களிடம் பேசுவது, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது என மொபைலில் மூழ்கி, நேரத்தை வீணடிப்பதோடு... மூளையையும் மழுங்கடித்துக் கொள்கிறார்கள். `ப்ளூவேல்' போன்ற ஆபத்தான வீடியோ கேம்ஸ் பற்றிய பகீர் செய்திகள் நம்மை அடையும்போது, சட்டென்று நம் வீட்டுக் குழந்தைகள் மொபைலில் விளையாடி வருவதை நினைத்துப் பதறாமல் இருக்கத்தான் முடியுமா!
குழந்தைகளின் விருப்பத்தைப் பூர்த்திச்செய்வது பெற்றோரின் கடமைதான். ஆனால், ஆபத்தான விஷயத்தைக் குழந்தைகள் கேட்கும்போது உஷாராக இருக்க வேண்டியதும் அவசியம். குழந்தைகளுக்கு எதைக் கொடுக்கிறோம்,  ஏன் கொடுக்கிறோம் என்பதையெல்லாம் புரிந்துகொண்டுதான் கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கும் மொபைல் போனுக்குமான தொடர்பை பெற்றோர்கள் எந்தளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு என்ன விடை கிடைக்கக்கூடும்?

பெற்றோர்களிடமே இதைக் கேட்டுத் தெரிந்துகொள்வதற்காகவே இங்கே விகடன் ஒரு சர்வே நடத்துகிறது.

044-66802987*

இந்தத் தொலைபேசி எண்ணுக்கு அழையுங்கள். கேட்கப்படும் கேள்விக்கு உங்களின் பதிலாக உரிய பட்டனை அழுத்துங்கள்.

உங்களின் பதில்களிலிருந்து கிடைக்கும் தெளிவு... அனைவருக்குமான பாடமாகவே இருக்கும். அந்தப் பாடத்தை `அவள் விகடன்' இதழில் கட்டுரையாக விரைவில் எதிர்பாருங்கள்.

இணையத்திலும் உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்...

https://goo.gl/JXQnZr

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick