வீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் - பேப்பர் பொருள்கள்... இது பிசினஸ் மட்டுமே அல்ல! | Household business for Mentally challenged children - Aval Vikatan | அவள் விகடன்

வீட்டிலேயே செய்ய வெற்றிகரமான தொழில்கள் - பேப்பர் பொருள்கள்... இது பிசினஸ் மட்டுமே அல்ல!

சாஹா, படங்கள்: தி.குமரகுருபரன்

குழந்தைகளுடனான உலகில் ஆர்வம் கொள்வதும் ஐக்கியமாவதும் எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை. அதீத அன்பும், அதைவிட அதிகமான பொறுமையும் இருப்பவர்களுக்கு மட்டுமே அது முடியும். சிறப்புக் குழந்தைகளுடனான உலகம் இன்னும் சிக்கல்கள் நிறைந்தது. அப்படிப்பட்ட குழந்தைகளைக் கையாள சிறப்புத் தகுதிகள் அவசியம். அந்தக் குழந்தைகளின் உடல், மன மொழிகளைப் புரிந்துகொண்டு அவர்களில் ஒருவராக வாழ்ந்துகொண்டிருக்கிறார் சென்னை, பள்ளிக்கரணையைச் சேர்ந்த கோமதி ஜெகதீசன். மாற்றுத்திறனாளியான இவர், சிறப்புக் குழந்தைகளுக்கென இல்லம் நடத்துவதுடன், அவர்களுக்கான தொழிற் பயிற்சிகளையும் அளிக்கிறார்.

‘`மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சிகள் எடுத்திருக்கேன்.  அந்தக் குழந்தைகளுக்கான சேவையில் சுமார் 30 வருஷங்களா ஈடுபட்டுக்கிட்டிருக்கேன். சிறப்புக் குழந்தைகளைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. எந்த வேலையும் இல்லாம சும்மா விடும்போதுதான் இந்தப் பிள்ளைங்க ஒருத்தரோட ஒருத்தர் சண்டை போடறதையும் ஆக்ரோஷமா நடந்துகிறதையும் பார்ப்போம். ஏதாவது வேலை கொடுத்து, அவங்க கவனத்தைத் திசைத்திருப்பிட்டா... சூழல் மறந்து அதுலயே ஐக்கியமாயிடுவாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick