ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்மார்ச் 20-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை

மேஷம்: பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்த கவலைகள் வந்துபோகும். பணவரவு திருப்தி தரும். வீடு கட்டுவதற்கு, வாங்குவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். தோற்றப் பொலிவு கூடும். மற்றவருக்குப் பணம், நகை வாங்கித் தருவதில் நீங்கள் ஈடுபட வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சுமுகமாகத் தீர்வு காண்பது நல்லது. 

வியாபாரம்: புதிய தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

உத்தியோகம்: வேலைச்சுமையால் மன இறுக்கம் அதிகரிக்கும்.

மன்னிக்கும் மனப்பான்மை அதிகரிக்கும்.


ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். சமையலறையை நவீனமயமாக்குவீர்கள். சுப நிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலை உயர்ந்த நகைகள் வாங்குவீர்கள். மின்னணு சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

வியாபாரம்: எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகம்: உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.

வசதி வாய்ப்புகள் பெருகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick