ஜானகி அம்மாள்

முதல் பெண்கள்ஹம்சத்வனி, ஓவியம் : கார்த்திகேயன் மேடி

த்மஸ்ரீ விருது பெற்ற முதல் பெண் விஞ்ஞானி; இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் முதல் பெண் தலைவர்; அமெரிக்காவில் தாவரவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்

`பிறக்கும்போதே கிழவியாகப் பிறந்திருக்கக் கூடாதா என்று அடிக்கடி நான் எண்ணுவ துண்டு. அப்படி இருந்தால், எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' - பத்தொன்பதே வயதான அந்தப் பெண் தன் அண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் இருந்த வாசகங்கள் இவை. இதே பெண், தாய்நாட்டை நீங்கி, பத்து வருடங்கள் அந்நிய தேசத்தில் அகதி போல வாழ்ந்த கதை தெரியுமா?

இடவேலத் கக்கத் ஜானகி அம்மாள்... கேரள மாநிலம் தெல்லிச்சேரியில் 1897-ம் ஆண்டு பிறந்த இவர், படிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டவர். ஹானிங்டன் என்ற ஆங்கிலேயருக்கும், குஞ்சு குரும்பி என்ற மலையாளப் பெண்ணுக்கும் பிறந்த ஈ.கே.கிருஷ்ணனின் மகளான ஜானகி, ஐரோப்பியர் போல உயரமும் இந்தியர் போன்ற தோற்றமும் கொண்டவர். சென்னை மாநிலக்கல்லூரியில் பி.எஸ்ஸி தாவரவியல் படித்த ஜானகி, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் ஓராண்டு பணியாற்றினார். பின்னர் மேற்படிப்புக்கு அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகம் சென்றார். 1931-ம் ஆண்டு அமெரிக்காவில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் ஆனார். படிக்கும் காலத்திலேயே, சைட்டோஜெனெடிக்ஸ் எனப்படும் மரபணு ஆய்வில் அதிக ஆர்வம்கொண்டிருந்த ஜானகி, `ஜானகி பிரிஞ்சால்’ எனப்படும் புதிய வகைக் கத்திரியை உருவாக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick