டாப்ஸ் டிசைனிங்... டாப் கிளாஸ் சுயதொழில்! - மகேஸ்வரி

நீங்களும் செய்யலாம் - டாப்ஸ்சாஹா, படம் : பா.காளிமுத்து

வீன உலகப் பெண்களின் ஆல்டைம் ஃபேவரைட் உடையாக மாறியிருக்கிறது டாப்ஸ். சல்வாருக்கும் பொருந்தும்; ஸ்கர்ட், ஜீன்ஸ் உடனும் அணியலாம்; கூடுதல் வேலைப்பாட்டோடு இருந்தால் அதையே பார்ட்டி உடையாகவும் மாற்றிக்கொள்ளலாம். எங்கேயும் எப்போதும் வசதியான உடையும்கூட. ஆனாலும், பிராண்டட் என்கிறபோது அதன் விலை, சேலை விலையை மிஞ்சிவிடும். ``தையல் கத்துக்கோங்க. டாப்ஸ் தைக்கிறதுல ஸ்பெஷலைஸ் பண்ணுங்க. விதவிதமா போட்டுக்கலாம். விரும்பினா நீங்களே டாப்ஸ் பிசினஸ் ஆரம்பிக்கலாம்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி.

‘`படிச்சது பி.ஏ தமிழ் இலக்கியம். அப்பாவும் தாத்தாவும் டெய்லர்ஸ். அதனால சின்ன வயசுலேருந்தே தையல் மெஷின் சத்தத்தோடும் நூல் வாசனையோடும் வளர்ந்திருக்கேன். 12 வருஷங்களா தைக்கிறேன். ஒவ்வொரு நிமிஷமும் நம்மை அப்டேட் பண்ணிக்கிட்டே இருந்தால்தான் இந்த உலகத்துல தாக்குப்பிடிக்க முடியும். அதனால ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் முடிச்சேன். ஃபேஷன் துறையில புதுசு புதுசா என்னவெல்லாம் வந்துக்கிட்டிருக்குனு கவனிச்சிட்டே இருப்பேன்’’ என்கிற மகேஸ்வரி, டாப்ஸ் தைப்பதில் ஸ்பெஷலிஸ்ட்.

எத்தனை மாடல்... என்ன ஸ்பெஷல்?

சுடிதாருக்கான டாப்ஸ், குர்தி, அம்ப்ரெல்லா டாப்ஸ், ஜீன் டாப்ஸ் என நிறைய வெரைட்டி உண்டு. சல்வாருக்கான டாப்ஸ் எல்லா வயதுப் பெண்களுக்குமானது. காலரும் முழங்கை வரை ஸ்லீவ்வும் வைத்த குர்தி, வேலைக்குப் போகிறவர்களின் சாய்ஸ்.  நீளம் குறைவான டாப்ஸ், ஜீன்ஸ் விரும்பிகளுக்கானது. இந்த மூன்றும்தான் அடிப்படை மாடல்கள். இவற்றைத் தைக்கத் தெரிந்துகொண்டாலே ஆயிரக்கணக்கான டிசைன்களை உருவாக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick