பிரிந்தவர் சேர... மணவாழ்வு மீட்புரிமைச் சட்டம்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சட்டம் பெண் கையில்யாழ் ஸ்ரீதேவி, ஓவியம் : கோ.ராமமூர்த்தி

டந்த இதழ்களில் விவாகரத்துச் சட்டங்கள் பற்றிப் பார்த்தோம். திருமணத்துக்குப் பின் வலுவான காரணங்கள் இல்லாமல் தம்பதிகள் பிரிந்துவாழும்போது, அவர்கள் ஒன்றுசேர்ந்து வாழ வகைசெய்யும் மணவாழ்வு மீட்புரிமைச் சட்ட நடைமுறைகள் குறித்து இந்த இதழில் பார்ப்போம்.

மணவாழ்க்கையை மீட்டளிக்கும் சட்டம்

ஈகோ, சொந்தங்களின் தலையீட்டால் விஸ்வரூபமாக்கப்பட்ட குடும்பப் பிரச்னை, கோபம், வெறுப்பு உள்ளிட்ட சூழ்நிலைகளால் பிரிந்து வாழும் தம்பதிகள் பலர். ஒருகட்டத்தில் பிரிவு வாழ்வின் கசப்பு தாங்காமல், ‘நாம் சேர்ந்து வாழ்ந்தால் என்ன?’ என்று மனைவி கணவருடனோ, கணவர் மனைவியுடனோ சேர்ந்து வாழ விரும்பினால், அவருக்குப் பக்கபலமாக நிற்கிறது மண வாழ்க்கையை மீட்டளிக்கும் சட்டம்.

இந்து திருமணச் சம்பிரதாயங்களின்படி திருமணம் செய்துகொண்ட இந்துக்களுக்கு இந்து திருமணச்சட்டம் 1955 பிரிவு 9, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட கிறிஸ்தவர்களுக்கு இந்திய விவாகரத்துச் சட்டம் 1869, பிரிவு 32, இரு வேறுபட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது திருமணத்தைச் சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் பதிவு செய்திருந்தால் சிறப்புத் திருமணச்சட்டம் 1954 பிரிவு 22 மற்றும் இஸ்லாமிய மத சம்பிரதாயத்தின்படி நிக்காஹ் செய்துகொண்ட இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியத் தனிச் சட்டங்கள்... என இந்தச் சட்டங்கள் எல்லாம் பிரிந்து வாழும் தம்பதி மீண்டும் சட்டப்படி இணைய துணை நிற்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick