ஒரு கடிதம் எழுதினேன்! - கவிப்ரியா

உணர்வுகள்ஆர்.வைதேகி

`உன்னை எண்ணிப்பார்க்கையில் கவிதை கொட்டுது...

அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...’ என யாருக்கோ, எதையோ எழுத நினைத்தபோது, கமல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி வார்த்தைகள் சிக்காமல் தவித்திருக்கிறீர்களா?

கடிதம் எழுத நினைத்து என்ன எழுதுவது, எப்படி எழுதுவது எனத் தெரியாமல் காகிதங்களைக் கசக்கி வீசிய அனுபவம் உங்களுக்கு உண்டா?

`குணா’ படத்தில் கமலின் உளறல்களைப் பாட்டாகப் படித்துக்காட்டிய நாயகியைப்போல உங்களுக்கும் இருக்கிறார் நிஜ நாயகி ஒருவர்!

சென்னைப் பெண் கவிப்ரியா மூர்த்தியிடம் உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டால் போதும். அடுத்த இரண்டு நாள்களில் உங்கள் எண்ணங்களை எழுத்தாக்கித் தருவார். ஒவ்வோர் எழுத்திலும் அழகியல் மிளிரும்.

Poetarita மூலம் கவிப்ரியா முன்னெடுத்திருக்கும் முயற்சி, உறவுச் சிக்கல்களுக்கும் உணர்வுச் சிக்கல்களுக்கும் மறைமுகத் தீர்வாகிறது.

``இன்ஜினீயரிங்கும் எம்.பி.ஏ-வும் முடிச்சிட்டு ஒரு நிறுவனத்துல வேலைபார்த்திட்டிருந்தேன். எழுதுறது சின்ன வயசுலயிருந்தே ரொம்பப் பிடிச்ச விஷயம். படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு வந்தப்போ மறுபடி தீவிரமா எழுத ஆரம்பிச்சேன். `ஐ டோன்ட் வியர் சன் ஸ்க்ரீன்’, `டர்ட்டி மார்ட்டினி’னு ரெண்டு புத்தகங்கள் எழுதி வெளியிட்டேன்.  ஃப்ரெண்ட்ஸ்ல யாருக்கு என்ன எழுதணும்னாலும் என்கிட்டதான் வந்து கேட்பாங்க. சாதாரண லெட்டரா இருந்தாக்கூட `சொல்ல வந்ததை கரெக்டா சொல்லியிருக்கேனான்னு பாரு’னு கேட்பாங்க. இன்னும் சிலர், `எனக்கு நிறைய சொல்லணும்னு தோணுது. ஆனா, அதையெல்லாம் கவிதை நயத்தோடு சொல்லத் தெரியலை. கொஞ்சம் அழகுபடுத்திக் கொடுக்கிறியா?’னு கேட்பாங்க.

கிரீட்டிங் கார்டு வாங்க கடைக்குப் போனா, பொதுவான வரிகளோடுதான் கிடைக்கும். தான் சொல்ல நினைக்கிற விஷயத்தை ஸ்பெஷலா ஃபீல் பண்ண வைக்கணும்கிற ஆசை எல்லோருக்குமே இருக்கும். ரெடிமேடு கார்டுகளில் அது சாத்தியமில்லை. இவங்க எல்லோருக்குமானதுதான் என் முயற்சி’’ - இன்ட்ரோ சொல்கிற கவிப்ரியா, பெங்களூரில் வசிக்கிறார். ஆனாலும், இந்தியாவின் எந்த மூலையில் இருப்போருக்கும் கடிதங்களும் கவிதைகளும் எழுதித் தருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்