எல்லாவற்றையும் கவனித்தால் என்றாவது பயன்படும்! - தீப்தி

புதிய வார்ப்புகள்மா.பாண்டியராஜன்

தமிழ் சினிமாவில் பல்வேறு துறைகளில் ஏராளமான பெண்களின் பங்கேற்பு இருந்தாலும், ஆர்ட் டைரக்‌ஷனில் ஜெயஸ்ரீ மட்டுமே தனித்துவத்துடன் முத்திரை பதித்திருக்கிறார். அவருக்கு அடுத்து யாரெல்லாம் களத்தில் இருக்கிறார்கள் என்று தேடியபோது ஜெயஸ்ரீயின் சிஷ்யை தீப்தி சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கிறார்.

’’ஆர்க்கிடெக்சர் படிக்கிற நிறைய பேர் அதுக்கும் ஆர்ட் டைரக்‌ஷனுக்கும் சம்பந்தம் இல்லைனு நினைக்கிறாங்க. ஆனா, ஆர்ட் டைரக்‌ஷனில் ஆர்க்கிடெக்சரும் ஒரு பார்ட்தான். இது எனக்கு `ஐ’ படம் பார்க்கும் போதுதான் புரிஞ்சது. அந்தப் படம் பார்த்தவுடன் ஆர்ட் டைரக்‌ஷன் துறையில்  ஈடுபடணுங்கற ஆசையோடு ஆர்க்கிடெக்சர் முடிச்சுட்டு ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் சார்கிட்ட வாய்ப்பு கேட்டேன்.

`நீ இந்த வேலைக்கு வராதே’னு சார் போனிலேயே ஒரு மணி நேரம் பேசினார். முதலில் எங்க வீட்டுலேயும் வேணாம்னுதான் சொன்னாங்க. `இல்ல, எனக்கு இதுலதான் ஆர்வம் இருக்கு’னு சொல்லிட்டு முத்துராஜ் சாரை நேர்ல போய்ப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும், ‘என்னமா ஸ்கூல் படிக்கிற பொண்ணு மாதிரி இருக்க... உன்னால இங்க சமாளிக்க முடியாதுமா’னு சொன்னார். நான் பிடிவாதமாக இருந்ததாலும், என்னுடைய வொர்க்ஸ் அவருக்குப் பிடிச்சிருந்ததாலும்  உதவியாளரா சேர்த்துக்கிட்டார். `2.0’, `மெர்சல்’, `வேலைக்காரன்’னு மூணு படங்களுக்கான வேலைகளை ஒரே நேரத்தில் பார்த்துட்டிருந்தார் முத்துராஜ் சார். எனக்கு `மெர்சல்’ பட வேலைகளைப் பிரிச்சுக் கொடுத்தார். 1970-களில் மதுரை எப்படி இருந்ததுனு பார்க்கச் சொல்லி ஐந்து பட சி.டி-க்களை கொடுத்தார். இந்தத் துறையில் இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். 2018-ல் இருந்து 1970-களுக்கு போகலாம். `2.0’ மாதிரியான படங்களில் வேலை செய்யும் போது ரொம்ப அட்வான்ஸா 2030-களுக்கு போற ஃபீல் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்