ஹீரோயின் ஷாப்பிங்

அலாவுதின் ஹுசைன், மா.பாண்டியராஜன் - படம் : பா.காளிமுத்து

என் கனவு - மஹிமா நம்பியார்

ஃபேவரைட் ஷாப்பிங் ப்ளேஸ்?

“எனக்கு அடிக்கடி ஷாப்பிங் பண்ற பழக்கமெல்லாம் இல்லை. அதனால, ஃபேவரைட் ப்ளேஸ்னு எதுவுமே இல்லை!”

அதிகமாக வாங்கும் பொருள்?

“ஷூ, பூட்ஸ் பிடிக்கும். நான் அதிகம் வாங்குகிற பொருள்களும் இவைதான்...”

ஃபேவரைட் பிராண்ட்?

“அதிகமா பயன்படுத்துற பிராண்ட் ‘ஸாரா’.”

ஃபேவரைட் ஷாப்பிங் ஏரியா?

“ரொம்ப ஈஸியா ஷாப்பிங் பண்ணக்கூடிய இடம் ஆன்லைன்தானே? ஸோ, ஆன்லைன் ஷாப்பிங்தான் என் இஷ்ட ஏரியா!”

மறக்கமுடியாத ஷாப்பிங் அனுபவம்?

“நடிக்க வந்த புதுசுல ‘கயல்’ ஆனந்தி, சந்திரன், நான் மூன்றுபேரும் மலேசியாவுல ஒரு நிகழ்ச்சிக்குப் போனோம். அங்கே தெருத் தெருவா அலைஞ்சு, எல்லாப் பொருள்களையும் தெரியாத மொழியில பேரம் பேசி வங்கினதை மறக்கவே முடியாது!”  

ட்ரீம் ஷாப்பிங் டெஸ்டினேஷன்? 

பிரான்ஸ் தலைநகரம் பாரீஸ்ல ஷாப்பிங் பண்றதுதான் என் கனவு. ஏன்னா, அதுதான் ஃபேஷன் உலகின் சொர்க்கபுரி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!