ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை `ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம் 

சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி எந்தக் காரியத்தையும் சாதிப்பீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம்  உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். உறவினர்கள் உங்களின் செயலை வியந்து பாராட்டுவார்கள். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும்.

வியாபாரம் சுமாராக இருக்கும். சந்தை நிலவரம் அறிந்து புதிய முதலீடுகளைச் செய்யுங்கள்.

உத்தியோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி வரும்.

நிதானத்தின் அருமையைப் புரிந்துகொள்வீர்கள்.


ரிஷபம் 

இதுவரை இருந்து தடுமாற்றம், தயக்கம் நீங்கி தைரியம் பிறக்கும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அதிகாரத்தில் இருப் பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சபை களில் முதல் மரியாதை பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி பணவரவு உண்டு. கணவன் மனைவி அந்நியோன்யம் பெருகும். பிள்ளைகள் நீண்ட நாள்களாகக் கேட்டுக்கொண்டிருந்த பொருள்களை வாங்கித் தருவீர்கள்.

 வியாபாரத்துக்காகப் புதிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்.

 வெற்றி இலக்கை அடையும் வேளையிது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்