ஜாலி டே - திருச்சியில் தித்திப்புக் கொண்டாட்டம்! | Aval Vikatan Jolly Day event in Trichy - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

ஜாலி டே - திருச்சியில் தித்திப்புக் கொண்டாட்டம்!

வாசகிகள் திருவிழா

டந்த நவம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் திருச்சியில் தித்திப்புக் கொண்டாட்டமாக நடந்தேறியது அவள் விகடன் மற்றும் வீனஸ் எலக்ட்ரானிக்‌ஸ் இணைந்து வழங்கிய `ஜாலி டே' திருவிழா... பவர்டு பை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி மற்றும் அபீஸ் ஹனி.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் 17-ம் தேதி நடந்த முன்தேர்வுப் போட்டிகளில் கலந்துகொள்ள, ஆர்வத்துடன் குவிந்தனர் நம் வாசகிகள். பாட்டு, பேச்சு, நடனம், டப்ஸ்மாஷ், செல்ஃபி, மைம் ஆகிய போட்டிகள், ஃபேஷன் ஷோ, ஷோ யுவர் டேலன்ட் என அனைத்திலும் அசத்தினார்கள் திருச்சி வாசகிகள்.

18-ம் தேதி... திருச்சி பெல் வளாகம், எம்.டி கலையரங்கத்தில் `ஜாலி டே' மெயின் நிகழ்ச்சி. பெல் மனிதவள மேம்பாட்டுத்துறை துணைப் பொதுமேலாளர் சமந்த், சிவில் துறை பொதுமேலாளர் நாகராஜ், மகளிர் மன்றத்தின் ஸ்ரீரஞ்சனி பாலசுப்ரமணியன், அவள் விகடன் வாசகி ரமணி பாட்டி ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர். சின்னத்திரை நடிகை சித்ரா, திருச்சி சரவணகுமார் ஆகியோர் நிகழ்ச்சியை உற்சாகத் துள்ளலுடன் தொகுத்து வழங்கினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close