சருமம்

பியூட்டி

``சரும அழகென்பது காஸ்ட்லியான க்ரீம்களிலோ, ஸ்பா சிகிச்சைகளிலோ மட்டும் வந்துவிடுவதில்லை. அடிப்படையான சரும ஆரோக்கியமே அழகுக்கு அஸ்திவாரம். அதை எந்த வெளிப்பூச்சாலும் சிகிச்சையாலும் தர முடியாது'' என்கிறார் ஷீபா தேவி

நாள் 1

காலையில் வெறும் வயிற்றில் தேன் சேர்த்த எலுமிச்சைப்பழ ஜூஸ்.

காலை உணவுக்குப் பிறகு ஓர் ஆப்பிள், ஒரு பீட்ரூட், இரண்டு கேரட் சேர்த்து அரைத்த ஏபிசி ஜூஸ்.

மதிய உணவுடன் ஓர் ஆப்பிள்.

இரவு உணவுக்குப் பிறகு சர்க்கரை சேர்க்காத மாதுளை ஜூஸ் ஒரு கப்

தூங்குவதற்கு முன்...

அரை டீஸ்பூன் தேனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைப்பழச்சாறு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட்டுத் தூங்கச் செல்லவும்.

நாள் 2

தேன் சேர்த்த கிரீன் டீ (வெறும் வயிற்றில்).

காலை உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ்.

மதிய உணவுடன் ஒரு கப் சோயா பீன்ஸ் (சுண்டலாகவோ, பொரியலாகவோ).

இரவு உணவுக்குப் பிறகு சர்க்கரை சேர்க்காத பால் ஒரு கப்.

தூங்குவதற்கு முன்...

அரை டீஸ்பூன் அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட்டுத் தூங்கச் செல்லவும்.

நாள் 3

இரண்டு கப் தண்ணீரில் கைப்பிடி அளவு புதினா சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் அரை மூடி எலுமிச்சைச்சாறும் சிறிது தேனும் சேர்த்து வெறும் வயிற்றில்  குடிக்கவும்.

காலை உணவுக்குப் பிறகு ஒரு வாழைப்பழம்.

மதிய உணவுக்குப் பிறகு ஒரு கப் கிவி ஜூஸ்.

இரவு உணவுக்குப் பிறகு ஒரு செவ்வாழைப்பழம்.

தூங்குவதற்கு முன்...

அரை வாழைப்பழத்துடன், ஊறவைத்த  பாதாமின் விழுது அரை டீஸ்பூன் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து மென்மையாக மசாஜ் செய்து கழுவிவிட்டுத் தூங்கச் செல்லவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்