அஞ்சறைப் பெட்டி - குங்குமப்பூ | Uses of Saffron - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

அஞ்சறைப் பெட்டி - குங்குமப்பூ

டாக்டர் வி.விக்ரம்குமார்

ளஞ்சூரியனின் ஒளியை அறிவிக்கும் செந்நிறம் சூடிய, மெல்லிய இழைகளைப் போன்று காட்சியளிக்கும் குங்குமப்பூ, உலகிலேயே விலையுயர்ந்த நறுமணமூட்டி. குங்குமப்பூவைப் பற்றி நினைத்ததும் அதன்மீது காதல் வயப்பட வைத்து மாயம் செய்துவிடும் என்பதால்தான் விலை அதிகமாக இருக்கிறதோ?

`குரோக்கஸ் சாடிவஸ்’ என்ற தாவரத் தின் மலரிலுள்ள மகரந்தங்களை ஏந்திக் கொண்டிருக்கும் சூல்முடியின் உலர்ந்த பகுதியே, குங்குமப்பூ. நாம் பயன்படுத்தும் குங்குமப்பூவாக உருவாக, பல்லாயிரக் கணக்கான மலர்கள் மற்றும் லட்சக்கணக்கான சூல்முடிகளின் தியாகம் தேவைப்படுகின்றன. உழைப்பாளர்கள் பலரின் நுணுக்கமான வேலைப்பாட்டில்தான் கிடைக்கிறது, இந்தச் செவ்விய நறுமணமூட்டி. இதன் விலை உச்சத்தில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
தெற்கு ஐரோப்பிய நாடுகள் இதன் பூர்வீகம். கிரேக்கத்தில் இதன் பயன்பாடு குறித்த கி.மு நான்காம் நூற்றாண்டு பதிவுகள் காணப்படுகின்றன.

`குரோக்கின்' (Crocin) மற்றும் `சாஃப்ரனால்' (Safranal) ஆகிய மருத்துவக் குணமிக்க வேதிப்பொருள்கள், குங்குமப்பூவுக்கு பலமூட்டு கின்றன. குங்குமப்பூவில் இருந்து பிரித்தெடுக்கப் படும் காரணிகள், மனச்சோர்வைத் தடுக்கப் பயன்படுவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. குங்குமப்பூ மனநோய்களுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது. தூக்கமின்மை பிரச்னைக்கும் நல்ல தேர்வு.

ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புத் திட்டுகளை அகற்றவும் மறதியைக் குறைக்கவும் குங்குமப்பூ உதவும். மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் எரிச்சல், கோபம் போன்ற உணர்வு களைக் குறைக்க குங்குமப்பூவின் உட்கூறுகள் உதவும். நடுக்குவாதம் மற்றும் சில வகை நரம்பு மண்டலக் கோளாறுகளைத் தீர்ப்பதில் குங்குமப்பூவுக்கும் பங்குண்டு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close