மார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்! | Gynecologists Jayarani talks about Breast care - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

மார்பக ஆரோக்கியம் - ஒரு செக் லிஸ்ட்!

ஜெயராணி, மகப்பேறு மருத்துவர்

மார்பகங்கள் அழகுக்கான அடையாளம் மட்டும் கிடையாது. அவை ஆரோக்கியத் துக்கான காரணியும்கூட. கடந்த சில வருடங்களாக, ‘குழந்தைக்குப் பால் கொடுக்கலைன்னா மார்பகப் புற்றுநோய் வரும்’, ‘கால தாமதமா குழந்தை பெத்துக்கிட்டா மார்பகப் புற்றுநோய் வந்துடும்’, ‘கருத்தடை மாத்திரை சாப்பிட்டா கேன்சர் வந்துடும்’ என்று ஏகப்பட்ட அச்சுறுத்தல்களைக் கடக்கிறோம். மார்பகங்களின் ஆரோக்கியத்துக்கு எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் ஜெயராணியிடம் கேட்டோம்.

கருத்தடை மாத்திரை மார்பகப்புற்றுக்கான வாய்ப்பை ஏற்படுத்துமா?

‘‘அந்த அபாயம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குடும்ப வரலாற்றில் ஏற்கெனவே ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பிருந்தால், அப்படிப்பட்ட பெண்களுக்குக் கருத்தடை மாத்திரை களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதைத் தவிர்ப்பார்கள். இந்த மாத்திரைகளில் இருக்கிற ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் மார்பகப் புற்றுக்கான வாய்ப்பை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அதிகப்படுத்திவிடலாம். இவர்கள் மாத்திரைகளைத் தவிர்த்துவிட்டு, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, மற்ற கருத்தடை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இறுக்கமான பிரா மார்பகப் புற்றை ஏற்படுத்துமா?

இறுக்கமான பிரா மற்றும் அண்டர் வொயர் பிராவால் மார்பகப் புற்று வர வாய்ப்பிருக்கிறதா என்று நிறைய பெண்கள் கேட்கிறார்கள். இறுக்கமான பிராக்களைத் தொடர்ந்து அணிந்தால், மார்பகங்களில் ரத்த ஓட்டம் தடைப்படுகிற பிரச்னை வரும். இதனால் மார்பகங்களில் புற்றுநோய் ஏற்படும் என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. பொதுவாக, சீரான ரத்த ஓட்டம் தடைப்படும் வகையிலான பிரா அணிவதைத் தவிர்ப்பது நல்லது.

[X] Close

[X] Close