சனா உதயகுமார் - தனியே... தன்னந்தனியே...

படங்கள் : சனா உதயகுமார்

``ஆங்கிலத்துல ஒரு பொன்மொழி இருக்கு, `You never know, until you go’. அதாவது, நீங்க தேடிப் போகிற வரை அது உங்களுக்குத் தெரியாதுனு அர்த்தம். வசதியான, பழக்கப்பட்ட சூழல்லயே வாழ்ந்திட்டிருக்கிற வரைக்கும் நம்ம பலமோ, பலவீனமோ நமக்குத் தெரியாது. அதுலேருந்து வெளியில வரணும். அதுக்கானதுதான் பயணம். இது எல்லா வயதினருக்கும் அவசியம்’’ - வலியுறுத்துகிறார் சனா உதயகுமார்... சென்னையைச் சேர்ந்த பயண ஆர்வலர், போட்டோகிராபர்.

``கம்ப்யூட்டர் டெக்னாலஜியும் எம்.பி.ஏ-வும் படிச்சிருக்கேன். ஐ.டி வேலை பிடிக்காம திடீர்னு ஒருநாள் அதை ரிசைன் பண்ணினேன். என் ஃப்ரெண்ட் ஒருத்தி துபாய்ல இருந்தாள். எனக்கு போட்டோகிராபி தெரியும். துபாய்ல போட்டோ ஜர்னலிசம் பண்ணலாம்னு கிளம்பிப் போயிட்டேன். ஆனா, விஸ்காம் டிகிரி இல்லைன்னு எனக்கு அங்கே அந்த வேலை கிடைக்கலை. அங்கே ஹலோ எஃப்.எம்ல ஆர்ஜே வேலையில சேர்ந்தேன்.

வேலையை விட்டுட்டு நாடு விட்டு நாடு போறேன்னு, அப்பா ரொம்பவே கோபப்பட்டார். அம்மா ஓரளவுக்குப் புரிஞ்சுக்கிட்டாங்க. என் டிராவல் ஆர்வத்துக்கு அடிப்படை போட்டோகிராபி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்