மெர்சல் பெண்கள்!

ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ஸ்

மிதாலி ராஜ்
கிரிக்கெட் - இந்தியா


பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின், மிதாலிதான். அதிக ரன்கள் எடுத்தவர், முதன்முதலாக 6,000 ரன்களைக் கடந்த பெண் கிரிக்கெட்டர் போன்ற சாதனைகளெல்லாம் இவர் வசமே. 2016-ல் நடந்த பெண்கள் உலகக்கோப்பையில் இந்திய அணியை ஃபைனல் வரை வழிநடத்தி அசத்தினார். பெண்கள் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஏழு போட்டிகளில் அரை சதம் எடுத்த ஒரே வீராங்கனை இவர்தான். 19 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டில் அசத்திவரும் மிதாலி, அர்ஜுனா விருதும் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.

16 வயதிலேயே இந்திய அணிக்காக ஆடத் தொடங்கிய மிதாலி, இன்று லட்சக்கணக்கான இந்தியச் சிறுமிகளுக்கு ரோல் மாடலாக விளங்குகிறார். விரைவில் இவரைப் பற்றிய திரைப் படமும் வெளிவர இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்