வெற்றி நிச்சயம் - லட்சுமி வெங்கடேசன்

திறமையை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு போகப் பொருளாதார வசதியும் சரியான வழிகாட்டுதலும் மிகமிக அவசியம். அவை கிடைக்கப் பெறுகிறவர்களால் மட்டுமே ஸ்டார்ட்அப்புகளில் சாதிக்க முடிகிறது. திறமையை மட்டும் நம்பிக்கொண் டிருக்கும் இளைஞர்களுக்கு?

அப்படிப்பட்டவர்களுக்கு வழிகாட்டுகிறது ‘பாரதிய யுவசக்தி டிரஸ்ட் (பி.ஒய்.எஸ்.டி)'. ஜே.ஆர்.டி டாட்டாவின் உதவியால் உருப்பெற்ற இந்த டிரஸ்ட்டின் பிரதான நோக்கம் வேலை தேடுவோரை வேலை உருவாக்குபவர்களாக மாற்றுவது. இதன் முனைப்பினால் லட்சக்கணக்கான இளைஞர்கள் தொழிலதிபர்களாகத் தலை நிமிர்ந்திருக்கிறார்கள். தேசிய, சர்வதேச அளவில் சிறந்த தொழிலதிபர்களுக்கான விருதுகளை வென்றுகொண்டிருக்கிறார்கள்.

 டிரஸ்ட்டின் சிறப்பான செயல்பாடுகளுக்குப் பின்னணியில் இருப்பவர் லட்சுமி வெங்கடேசன். பி.ஒய்.எஸ்.டி-யின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரான இவர், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனின் மகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்