நீங்களும் செய்யலாம் - கேட்டரிங் - மதுமிதா | Catering Business - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

நீங்களும் செய்யலாம் - கேட்டரிங் - மதுமிதா

சென்னை, மேற்கு மாம்பலத்தில் வசிக்கிற மதுமிதா செய்கிற கேட்டரிங் பிசினஸ், இவர்களின் பிரச்னைக்கான தீர்வு மட்டுமல்ல, நன்றாகச் சமைக்கத்தெரிந்தவர்களுக்கான பிசினஸ் வழிகாட்டியும்கூட!

‘`பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன். பூர்வீகம் திருநெல்வேலி. அந்த ஊர் பாரம்பர்ய சமையல் நல்லா செய்வேன். கல்யாணத்துக்குப் பிறகு வீட்டுல தினம் சமைக்கிறதைச் சாப்பிட்டுப் பார்த்துட்டு,  அக்கம்பக்கத்துல உள்ளவங்க  பாராட்டினாங்க.  அவங்கள்ல ஒரு வயசான தம்பதி, தங்களுக்கு தினமும் மதியச் சாப்பாடு தர முடியுமானு கேட்டபோதுதான் இதை ஒரு பிசினஸாகூட பண்ண முடியும்னு எனக்குத் தெரிஞ்சது. முதல் ஆர்டரா அவங்களுக்கு தினமும் சாம்பார், ரசம், பொரியல், கூட்டு கொடுக்க ஆரம்பிச்சேன். அப்படியே ஆர்டர் எண்ணிக்கை அதிகமாச்சு.  மதிய உணவு மட்டும்தான் பண்றேன். சிலர் சாதம் வேண்டாம், சாம்பார், குழம்பு, பொரியல் மட்டும் போதும்னு கேட்பாங்க. சிலர் சாதத்தோடு சேர்த்துக் கேட்பாங்க. அதுக்கேத்தபடி பண்ணிட்டிருக் கேன். சொன்னா நம்ப மாட்டீங்க... ஒரே ஒரு டிபன் கேரியரோடு ஆரம்பிச்ச பிசினஸ் இது. இன்னிக்கு இதுதான் எனக்கு வாழ்வாதாரமா மாறியிருக்கு....’’ என்கிற மதுமிதா, ஆர்வமுள்ளோருக்கு வழி காட்டுகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close