முதல் பெண்கள் - கே.பி.ஜானகியம்மாள் | First TN leader of Democratic Youth Federation of India - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

முதல் பெண்கள் - கே.பி.ஜானகியம்மாள்

ஹம்சத்வனி, ஓவியம் : கார்த்திகேயன் மேடி

“அவங்களை சின்ன வயசுலேர்ந்தே நான் பார்த்து வளர்ந்திருக்கேன். ரொம்ப இரக்க குணம். யார் வந்து என்ன கேட்டாலும் தயங்காம உதவற குணம். ரொம்ப ரொம்ப எளிமையான வாழ்க்கை. கணவன், மனைவி ரெண்டு பேருமே கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயேதான் கடைசி காலம் வரை தங்கியிருந்தாங்க. அவங்க கணவர் இறந்த பிறகுகூட அவங்களைக் கவனிச்சுக்கிட்டது கட்சிக்காரங்கதான். அப்பவும் பகல் முழுக்க கிராமம் கிராமமா மக்களைச் சந்திக்கப் போவாங்க. இரவுல கட்சி அலுவலகத்துல பார்ப்பாங்க.

அவங்க உயிரோடு இருந்தப்ப அவங்க வாழ்க்கை வரலாற்றை நான் எழுதியிருந்தேன். அதை முடிக்கிற நேரத்துல அவங்களை சந்திச்சேன். `உங்க எதிர்கால தலைமுறைக்கு நீங்க என்னம்மா சொல்ல விரும்புறீங்க?' அப்படின்னு கேட்டேன். `நான் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. எதிர்காலத்தை மட்டுமே பார்க்க விரும்புகிறேன்'னு சொன்னாங்க. என் மனசுல ரொம்பவும் ஆழமா பதிஞ்ச விஷயம் அது” என்று சொல்லி முடிக்கிறார் என்.ராமகிருஷ்ணன். மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான என்.சங்கரய்யாவின் தம்பியும், எழுத்தாளரும், கம்யூனிஸ்ட் கட்சி செயற்பாட்டாளருமான இவர், கே.பி.ஜானகியம்மாளின் வாழ்க்கை வரலாற்றை மூன்று புத்தகங்களாக எழுதியிருக்கிறார். `ஒரு அம்மாவின் கதை' என்கிற வாழ்க்கை வரலாறு ஜானகி உயிருடன் இருந்தபோதே வெளிவந்தது. அவர் இறந்ததும், `அம்மா ஜானகி' என்ற விரிவான புத்தகமும், பின்னர் அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எழுதிய `கே.பி.ஜானகியம்மாள், கலை உலகிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு' என்ற நூல் வெளிவந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close