14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்!

முதல் பனியை ரசித்த ஆப்பிரிக்க அகதிக் குழந்தைகள்!

னடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் தன் ட்விட்டர் பக்கத்தில் முதல் பனிப் பொழிவை ரசித்து விளையாடிய இரு ஆப்பிரிக்கக் குழந்தைகளின் காணொலியைப் பகிர்ந்திருந்தார். கூடவே, “அருமை! இப்படியே பனியை ஷவல் செய்து விலக்குவது எப்படி என்றும் அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். அது போதும். நீங்கள் செய்த அனைத்துக்கும் நன்றி, ரெபெக்கா” என்றும் பதிவிட்டிருந்தார். இந்தக் காணொலியை முதலில் பதிவு செய்தவர் டொரன்டோ நகரைச் சேர்ந்த ரெபெக்கா டேவிஸ் என்ற பெண். அங்கு இயங்கும் `ரிப்பிள் ரெஃப்யூஜி புராஜெக்ட்’ என்ற தன்னார்வலக் குழுவில் உறுப்பினர் அவர். சிரியா மற்றும் எரிட்ரியா ஆகிய நாடுகளில் இருந்து கனடா நாட்டுக்கு வரும் அகதிகளை ஆதரித்து, உதவிக்கரம் நீட்டுகிறது இந்தக் குழு. மக்களிடம் நன்கொடையாக ஆயிரக்கணக்கான டாலர் பணம் வசூலித்து அகதிகளை கனடாவில் குடியமர்த்த உதவுகிறது. வேலை கிடைக்கும்வரை இந்த அகதிகளுக்கு, தன்னார்வலர்கள் தங்கள் வீடுகளில் தங்க இடம் தருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்