கிச்சன் பேஸிக்ஸ் - ரொட்டி | kitchen basics - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

கிச்சன் பேஸிக்ஸ் - ரொட்டி

- விசாலாட்சி இளையபெருமாள், படங்கள், வீடியோ : லக்ஷ்மி வெங்கடேஷ்

ம் முன்னோர்களின் உணவு முறை இயற்கையோடு இணைந்து இருந்தது. அதில் சிறுதானியங்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சிறுதானியங்களின் முக்கியமான சில வகைகளாகக் கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, தினை, பனிவரகு ஆகியவற்றைக் கூறலாம். உடலுக்கு நன்மை அளிக்கும் சிறுதானியங்களுக்கு அக்காலத்தில் அதிக முக்கியத்துவம் இருந்திருக்கிறது.

ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் தனித்தனி மருத்துவக் குணங்கள் உண்டு. பொதுவாக இவற்றில் அதிக அளவு ஊட்டச்சத்து, புரதம், நார்ச்சத்து... நியாசின், தயமின் ஆகிய வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் ஆகியவை நிறைந்திருக்கின்றன. பொதுவாக அனைத்துமே எளிதில் ஜீரணமாகக் கூடியவையாகவும், நீரிழிவைக் கட்டுக்குள்வைக்கும் தன்மை, மலச்சிக்கலை நீக்கும் தன்மை மற்றும் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருப்பதுடன் உடல் உஷ்ணத்தைக் குறைக்க, உடலைச் சீராக வைக்க உதவுகின்றன. இதயத்தை மற்றும் எலும்பைப் பலப்படுத்த உதவுகின்றன. வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் மற்றும் வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானத்தினால் ஏற்படும் வலி, ஆர்த்தரைடீஸ் மற்றும் ஆஸ்டியோபோராசிஸ் போன்ற நோய்களின் தன்மையைக் குறைக்கவும் உதவுகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் ஊட்டப்படும் செமி சாலிட் (Semi Solid) உணவுகளில் கேப்பைக் கூழைத்தான் டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close