கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்! | Financial awareness for women - Loan Documents - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - கடன் பத்திரங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

“வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை; அசலுக்கு எந்தப் பங்கமும் வரக் கூடாது’’ என்பதில் நம்மவர்கள் படுகுறியாக இருப்பார்கள். இந்த விஷயத்தில் பெண்கள் ரொம்ப கெட்டி. இதுமாதிரியானவர் களுக்கு ஏற்றவை கடன் பத்திரங்கள்!

நம் நாட்டில் வங்கிகள் போல, அரசும் கடன் பத்திரங்களை அவ்வப்போதைக்கு வெளியிடு கிறது. சிலவற்றில் நாமே நேரடியாக முதலீடு செய்ய முடியும் (சில வகை பத்திரங்களை மியூச்சுவல் ஃபண்ட் போன்ற கம்பெனிகள் மட்டுமே வாங்க முடியும்).

இவற்றில் வட்டி வருமானம் தவிர, நிகர சொத்து மதிப்பு (NAV) உயர்ந்து லாபம் வரவும் வாய்ப்புண்டு. சில நேரம், மதிப்பு குறையலாம்; அப்போது முதிர்வு காலம் வரை இந்தப் பத்திரங்களை வைத்திருந் தால், நாம் போட்ட முதல், நஷ்டமின்றி நமக்குத் திரும்பக் கிடைக்கும். இவற்றுக்கு அரசு உத்தரவாதம் இருப்பது கூடுதல் சிறப்பு. இப்போது விற்பனையாகும் அரசுப் பத்திரங்கள் தரும் வட்டி 7.75%.

என்.ஹெச்.ஏ.ஐ (NHAI), பி.எஃப்.சி (PFC) போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் வரி இல்லாப் பத்திரங்களை (Tax Free Bonds) வெளியிடுகின்றன. இதில் வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், வரி இல்லாக் காரணத்தால், 20%-30% வரி வரம்பில் உள்ளவர்களுக்கு ஏற்றவை.

[X] Close

[X] Close