#நானும்தான் - குறுந்தொடர் - 3 | Miniseries about Metoo campaign - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/11/2018)

#நானும்தான் - குறுந்தொடர் - 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ன்னல் வழி நிலவு மட்டும்தான் துணை என நினைத்தாள் நித்யா. உண்மையில் தனக்கு யாருமே இல்லையா என ஓர் உடனடி கவலை அவளை வெறுமையில் ஆழ்த்தியது.

அந்தச் சின்னஞ்சிறு கிளினிக்கில் இன்னும் இரண்டு பேஷன்ட்டுகள்தான் டாக்டரைப் பார்க்கக் காத்திருந்தனர். கைக்குழந்தையோடு இருந்த பெண்ணிடம் ‘அடுத்து நீதான்’ என்பதை ஜாடையில் மட்டும் சொன்னாள். அந்தப் பெண் சிரித்தாள். நித்யா அந்தக் குழந்தையின் கன்னத்தருகே காற்றைக் கிள்ளி முத்தமிட்டு, ‘‘போலியோ ட்ராப்ஸ் குடுத்தாச்சா?’’ என்றாள். அதற்குள் பேஷன்ட் வெளியே வர, அந்தப் பெண் தலையாட்டியபடியே உள்ளே போனாள். இப்போது இன்றைய கடைசி நோயாளி மட்டுமிருந்தார். அறுபது வயது மதிப்பு. ‘‘இதுக்கப்புறம் வீட்டுக்குப் போய் சமைக்கணுமா?’’ என்றார். விளக்கம் கொடுக்க வேண்டாம் என நினைத்தாளா, சோர்வா எனக் கோடு கிழித்து அறிய முடியவில்லை. இத்தகைய தருணங்களில் நித்யாவிடம் பொதுவாக ஒரு பதில்தான்... சிரிப்பு.

நகரத்துக்குச் சற்றே தள்ளியிருந்த அந்த கிளினிக்கில் ஒவ்வொரு நாள் மாலையும் எட்டு பேர் சராசரி நோயாளிகள். கிளினிக்கை ஐந்து மணிக்கெல்லாம் வந்து திறந்துவைப்பது, வருகிறவர்களுக்கு வரிசைப்படி சிகரெட் அட்டை டோக்கன்களை வழங்குவது, மருந்து வழங்குவது, டாக்டர் போனதும் கிளினிக்கைப் பூட்டிக்கொண்டுக் கிளம்புவது என எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வாள்.

இப்போது சமையல் பற்றி விசாரித்த பெரியவரும் போய்விட்டார். டாக்டர் மட்டும்தான். உள்ளே போய், டாக்டர் குடித்துவைத்த காப்பி கோப்பையைக் கழுவி, ஃப்ளாஸ்க்கில் இருந்த மீதி காபியை ஊற்றி அவருக்குத் தந்தாள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close