கதை சொல்வதில் என் அண்ணா ஸ்பெஷலிஸ்ட்! - ஜெயஸ்ரீ

ப்ரியங்களுடன்...

“லைஃப்ல பெண் குழந்தை பெத்துக்கிறதும், பெண் குழந்தையோட பொறக்கிறதும் பெரிய வரம்னு எனக்குப் புரிய வெச்சவ என் தங்கச்சி ஜெயஸ்ரீதான்'' - நடிகர் விஜய் சேதுபதி அவர் தங்கை பற்றிப் பேசும்போது இப்படிதான் சொல்வார்.

விஜய் சேதுபதியின் வளர்ச்சியைப் படிப்படியாக அருகில் இருந்து பார்த்தவர் ஜெயஸ்ரீ. 

“அண்ணாவின் முதல் குழந்தையே நான்தான்னு சொல்லலாம். அவரும் அப்படித்தான் சொல்வார்.  எங்க வீட்டுல அண்ணன் தங்கை சண்டை எல்லாம் பெரிசா இருந்ததே கிடையாது. நான் எது கேட்டாலும் எங்க அண்ணன் எனக்காகச் செஞ்சு கொடுத்துடுவார்.

எனக்கு மொத்தம் மூணு அண்ணங்கள். நான்தான் கடைக்குட்டி. எல்லாரும் என் மேலே ரொம்ப பாசமா இருப்பாங்க. முதல் அண்ணாவுக்கும் எனக்கும் எட்டு வயசு வித்தியாசம். விஜய் சேதுபதி  அண்ணாவுக்கும் எனக்கும் அஞ்சு வயசு வித்தியாசம். அவர்தான் என்னை ஸ்கூலுக்குக் கூட்டிப்போறது, வர்றதுனு எல்லாத்தையும் பார்த்துப்பார்த்துச் செய்வார். எனக்கு எது வேணும்னாலும், எது கேட்டாலும் உடனே அதை வாங்கிக் கொடுத்திடுவார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick