அம்மா என்ற வார்த்தைக்கு அவ்வளவு மரியாதை! - `கைரி' மதுமாலா | Madhumala Chattopadhyay, the woman who had friendly meet with sentinels - Aval Vikatan | அவள் விகடன்

அம்மா என்ற வார்த்தைக்கு அவ்வளவு மரியாதை! - `கைரி' மதுமாலா

உயிரின் மொழி

“உங்களை, உங்கள் பணியை இப்படி மொத்தமாக இருட்டடிப்பு செய்து விட்டார்களே? உங்களுக்கு வருத்தமாக இல்லையா? கோபம் வரவில்லையா?” என்ற என் கேள்விக்கு பொறுமையாக அவரிடமிருந்து பதில் வருகிறது. “வருத்தம்தான். அப்போது நான் வெறும் ஆராய்ச்சி மாணவி மட்டுமே. நான் முதன்முதலில் சென்டினலீஸ் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தியதை அரசுக்குக்கூடத் தெரியப்படுத்தவில்லை அப்போது இருந்த உயர் அதிகாரிகள். தங்கள் புகைப்படங்களைப் பத்திரிகைகளில் போட்டுக்கொண்டு, அரசிடம் பரிசும் பதவி உயர்வும் வாங்கிக் கொண்டார்கள்.

அதுபற்றி கவலைகொள்ளாமல், நான் எங்கு இருக்கிறேனோ அங்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தாலும் இந்த விருதுகளும் பாராட்டுகளும் நிறைவாக இருக்கின்றன. இவற்றைவிட, அந்த மக்களையே அதிகம் நேசிக்கிறேன்” என்று கூறுகிறார் மதுமாலா.

சமீபத்தில் அமெரிக்க மிஷனரியான ஜான் ஆலன் ஷாவைக் கொடூரமாகக் கொன்று அரைகுறையாகப் புதைத்து வைத்த பழங்குடி இனம்தான் அந்தமானின் வட சென்டினல் தீவில் வசிக்கும் சென்டினலீஸ் மக்கள். இவர்களை முதன்முதலில் வெகு நெருக்கத்தில் சந்தித்து உரையாடிய மானுடவியலாளர் மதுமாலா சட்டோப்பாத்யாய். இனி அந்தமான் காடுகளில் ஒரு வித்தியாச பயணம், மதுவுடன்…

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick