தென்னிந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்கள் - சீதா தேவதாஸ், ஆனந்தா பாய்

முதல் பெண்கள்!ஹம்சத்வனி, ஓவியம் : கார்த்திகேயன் மேடி

“பெரியம்மா எப்பவுமே  ஸ்ட்ரிக்ட். ஆனா, ரொம்ப அன்பானவங்க. கண்டிப்பும் அன்பும் அவங்ககிட்ட சரிசமமா இருக்கும். மயிலாப்பூர்ல இருந்த `சில்வான் லாட்ஜ்' என்கிற பெரிய வீட்டுலதான் பெரியம்மா இருந்தாங்க. சனி, ஞாயிறுன்னா எனக்குப் பயங்கர குஷி. வாரம் முழுக்க நல்ல பையனா இருந்தா, பெரியம்மா ஸ்பென்சர்ஸ் மாலுக்கு கூட்டிட்டுப் போவாங்க. ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித் தருவாங்க. ஆனா… சமர்த்தா இருந்தாதான்!

`வாழ்க்கைன்னா இப்படித்தான் இருக்கணும்’னு ஒரு கோட்பாட்டோடு வாழ்ந்த அவங்க. லாயர், பாரிஸ்டர், நேர்மை, எல்லாத்துலேயும் கச்சிதம்னு ரொம்ப முறையா செயல்படுவாங்க. சீதா பெரியம்மா. டிபன் எட்டரை மணிக்கு, மதிய உணவு ஒரு மணிக்குன்னு எல்லாமே அவங்களுக்கு அந்தந்த நேரத்துக்கு நடக்கணும். சொன்னா நம்பமாட்டீங்க... வீட்டுல சாப்பாடு நேரத்தை அறிவிக்க மணி இருந்தது!
ஒரு நீளமான வில்லிஸ் டூரர் கார் வெச்சிருந்தாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick