தீக்குள் உடலை வைத்தால்... ரூப் கன்வர்

எதிர்க்குரல்மருதன்

றந்து கிடக்கும் கணவனின் தலையை மெல்லத் தூக்கி தன் மடியின் மீது கிடத்திக்கொண்டார் ரூப் கன்வர். அவர் உடல் நடுங்கியது. சற்று தள்ளி சிதை எரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. கொழுந்து விட்டெரியும் நெருப்பை உணர்ச்சிகள் ஏதுமற்று பார்த்துக்கொண்டிருந்தார் ரூப் கன்வர். சுற்றிலும் தன் பார்வையைச் சுழலவிட்டார். ஒரு பெருங்கூட்டம் மயானத்தைச் சுற்றிக் கூடியிருந்தது. அதில் கணவரின் உறவினர்களுக்குத் தெரிந்தவர்கள், பழக்கமான வர்கள் இருப்பார்கள். அக்கம் பக்கத்தினர் இருப்பார்கள்.

துக்க நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களுக்குச் சமமாக வேடிக்கை பார்க்க வந்தவர்களும் இருப்பார்கள். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இருக்கலாம். அது தவிர்க்கவியலாதது. அவர்களுக்காகவும் சேர்த்துதான் இப்பெருநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

போதுமான அளவுக்குத் தீ வளர்ந்து விட்டது. `தயார்' என்று யாரோ குரல் கொடுத்தார்கள். ரூப் கன்வர் எழுந்து கொண்டார். முதலில் இறந்த உடலை எடுத்துச் சென்று கிடத்தினார்கள். `அடுத்து நீ' என்று அறிவுறுத்தியிருந்தார்கள். `கண்களை மூடிக்கொள், கடவுளை நினைத்துக்கொள். எல்லாம் நல்லபடியாக நடக்கும், போய் வா.'

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick