14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்!

`பலோன் தோர்’ கோப்பை வென்ற முதல் பெண்!

1956-ம் ஆண்டு முதல் உலகின் தலைசிறந்த கால்பந்து ஆட்டக்காரருக்கு பிரான்ஸ் வழங்கிவரும் உயரிய கோப்பை, பலோன் தோர். இந்த ஆண்டுதான் முதன்முறையாக கால்பந்தில் கலக்கும் பெண் ஒருவருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் லீயோன் அணியின் முன்னணி ஆட்டக்காரரான ஆடா ஹெகெர்பெர்க். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை பிரான்ஸ் வெல்ல காரணமாக இருந்தவரும் இவரே. ஆடா அடித்த கோல்கள் 15!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick