தாத்தாவின் ஓவியங்களில் கடவுள்களை நேரில் பார்க்கலாம்!

ராஜா ரவி வர்மாவின் எள்ளுப்பேத்தி ருக்மிணி வர்மாஓவியம் காவியம்ஓவியங்கள் : ருக்மிணி வர்மா

ராஜா ரவி வர்மா, ஓவியக் கலையின் மாமனிதர். இவரின் ஓவியங்கள், வெறும் காட்சிப்பொருளாக அழகுகாட்டுபவை அல்ல; நம்முடன் பேசுபவை, உணர்வுகளைப் பரிமாறுபவை, உயிர்ப்புள்ளவை. ருக்மிணியின் ஓவியங்களைப் பார்க்கும்போதும் இதே உணர்வுகள் எழுகின்றன.

பின்னே ருக்மிணியின் ரத்தத்தில் கலந்திருப்பது ரவி வர்மாவின் மரபணுக்கள் அல்லவா?

பெங்களூரில் வசிக்கும் ருக்மிணி வர்மா, ராஜா ரவி வர்மாவின் எள்ளுப்பேத்தி. `தி ராஜா ரவி வர்மா ஹெரிட்டேஜ் ஃபவுண்டேஷ’னின் நிர்வாகி.

ரவி வர்மா என்கிற கலைஞன் இறந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ருக்மிணி வர்மா தனது `தி ஹிட்டன் ட்ரூத் - ராஜா ரவி வர்மா’  என்ற புத்தகத்தில் தாத்தாவின் பெருமைகளை நினைவுகூர்ந்திருக்கிறார்.

78 வயதிலும் 18-ன் உற்சாகத்தையும் உழைப்பையும் பார்க்க முடிகிறது ருக்மிணியிடம். ஃபவுண்டேஷன் நிர்வாகம், ஓவியங்கள், எழுத்துப்பணி, பிளாகிங், சமூக வலைதள ஈடுபாடு என, 24 மணி நேரம் போதாமல் ஓடிக்கொண்டிருக்கிறவரும், தாத்தாவைப்போலவே ஓர் உதாரண மனுஷிதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick