ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டிசம்பர் 11-ம் தேதி முதல் முதல் 24-ம் தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

மேஷம் மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கணவர் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். மகனின் அலட்சியப்போக்கு மாறும். உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வர். செலவுகள், பயணங்கள் அதிகரிக்கும். சகோதர வகையில் வீண் வாக்குவாதங்கள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் வரவு உயரும். தொழில் போட்டிகள் இருக்காது.

உத்தியோகத்தில் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். ஆனால், வேலைப்பளு அதிகரிக்கும்.

விட்டுக்கொடுத்து வெற்றிபெறும் நேரமிது.


ரிஷபம்  நிர்வாகத்திறன் கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். புதியவர்களால் ஆதாயம் உண்டு. பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கணவர் உங்கள் ஆலோசனை களை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் வகையில் செலவுகள் வந்து போகும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகளை இப்போது செய்ய வேண்டாம்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது.

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் நேரமிது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick