``இது வெறும் தொழில் இல்லை... எங்கள் வாழ்க்கை!’’ - பெண்கள் `கானா’ படை

மயக்கும் மக்கள் இசைரமணி மோகனகிருஷ்ணன் - படம் : ப.பிரியங்கா

கேட்டவுடன் ஈர்க்கும் பீட்... பயன்பாட்டில் இருக்கும் வார்த்தைகள்... மிகைப்படுத்தப்படாத வரிகள். இந்த இயல்புதான் கானா பாடல்களின் மீதான ஈர்ப்புக்குக் காரணம். இன்று வெளிவரும் திரைப்படங்களில் மெலடி, கிளாஸிக் வரிசையில் ஒரு கானா பாடலும் இடம்பெற வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. இப்படி ஒருபக்கம் கானாவுக்கான வரவேற்பு அதிகரித்துக்கொண்டே வர, ‘பசங்க மட்டும்தான் பாடுவாங்களா? நாங்களும் கானாவுல கலக்குவோமே’ என்று அதிரடியாக இசைக்கிறார்கள் இந்தப் பெண்கள்.

“எனக்குச் சின்ன வயசுலேருந்தே கானா ரொம்பப் பிடிக்கும். மைக்கேல் அண்ணா பாடல்களை விரும்பி கேட்பேன். எங்க ஸ்கூல்ல கானா பாடுற பசங்களோட சேர்ந்து சூப்பரா பாட ஆரம்பிச்சேன். காலேஜ் வந்ததுக்கப்புறம் ரூட்ல (பேருந்தில் போய்வரும்போது) நிறைய பாடுவேன். அதுக்கப்புறம் நானும் என் ஃப்ரெண்ட் ஜேக்குலினும் சேர்ந்து ‘எங்கம்மா சொல்லுச்சிடா அப்போவே’னு ஒரு கானா பாட்டைப் பாடி வாட்ஸ்அப்லயும் யூடியூப்லயும் வெளியிட்டோம். அது பயங்கர ஹிட் ஆகிடுச்சு. எங்க வீட்டுக்குப் பக்கத்துல நடக்குற நிகழ்ச்சிகள்ல எல்லாம் ஸ்பீக்கர்ல அந்தப் பாட்டைக் கேட்கும்போது அவ்ளோ சந்தோஷமா இருக்கும்’’ என்று பவ்யமாக ‘ரூட்டு தல’ சுஜி ஷாலு டோலக்கைத் தட்டிக் கொண்டே பேச, ஜென்னி தொடர்ந்தார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick