முன்னொரு காலத்தில் காதல் இருந்தது! - பூர்ணா | Interview With Actress Shamna Kasim - Aval Vikatan | அவள் விகடன்

முன்னொரு காலத்தில் காதல் இருந்தது! - பூர்ணா

நட்சத்திரம்சனா - படங்கள் : மீ.நிவேதன்

``நான் நடிக்கவந்த நேரத்தில் தெலுங்குப் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று நினைத்ததுண்டு. இப்போது தெலுங்கிலும் பெண்களுக்குக் குறிப்பிடத்தக்க கேரக்டர்கள் வருகின்றன. நானே, தெலுங்கில் நல்ல ரோலில் நடித்திருக்கிறேன். தமிழில், ‘அறம்’ படத்தின் சூப்பர் ஹீரோவாகவே நயன்தாரா நடித்திருந்தார். எனக்கும் இதுபோன்ற வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கத்தான் பிடிக்கும். அதனால்தான் நல்ல கேரக்டர் வரும்வரை காத்திருந்து படங்களில் ஒப்பந்தமாகிறேன். இத்தனை ஆண்டுகளில் சில படங்களே என்றாலும் எனக்கு மகிழ்ச்சியே'' என்று குறையிலும் நிறை காண்கிற நடிகை பூர்ணா, தன் வாழ்க்கைப் பயணத்தை நம்மோடு பகிர்கிறார்.

‘`என் உண்மையான பெயர் ஷம்னா கசிம். இந்தப் பெயரைப் பலருக்குச் சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை. அதனால் பூர்ணா என்று நானே மாற்றி வைத்துக்கொண்டேன். சொந்த ஊர் கேரளாவிலுள்ள கள்ளூர். எனக்கு மூன்று அக்காக்கள், ஓர் அண்ணா. இப்போது அவர்கள் எல்லோருக்கும் திருமணம் முடிந்து குழந்தைகளுடன் இருக்கின்றனர். நான்தான் கடைக்குட்டி, செல்லக்குட்டி.

எங்கள் ஊரில் முதன்முதலாகப் பரதநாட்டியம் கற்றுக்கொண்ட பெண் நான் தான். ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே   என் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. நான்காம் வகுப்பு படிக்கும்போது `கலா சந்திர' விருது வாங்கினேன். தேசிய அளவில் பரதநாட்டியப் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick