இழப்புகளே இரும்பு மனுஷியை உருவாக்குகின்றன! - ஜெயா

உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்ஆர்.வைதேகி - படங்கள் : க.பாலாஜி

ஸ் ஸ்டிரைக்கின் பின்னணி தொடங்கி, ரஜினி அரசியலுக்கு வரலாமா, கூடாதா என்பது வரை நாட்டு நடப்புகளை அத்தனை அழகாக அலசுகிறார்.

‘`முன்னெல்லாம் காலையில முதல் வேலையா பேப்பர் படிச்சு எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுப்பேன். இப்ப கொஞ்ச நாளா கண்ணு சரியா தெரியமாட்டேங்குது. அதனால டி.வி-யில நியூஸ் பார்த்துடுவேன்...’’ - திட்டுத்திட்டாகப் பவுடர் பூசப்பட்ட முகத்திலிருந்து தீர்க்கமான புன்னகை வெளிப்பட பேசுகிறார் ஜெயா. அழகுக்கலை நிபுணர் வசுந்தரா நடத்தும் பியூட்டி பார்லரின் பணிப்பெண்.

பார்லருக்கு வரும் பெண்களில் பலரும் `ஜெயாக்கா’, `ஜெயாம்மா’, `ஜெயா ஆயா’ என அழைக்கும் அளவுக்கு அனைத்து வயதினருக்கும் சிநேகமானவர். உள்ளே வருபவர்களை முதலில் வரவேற்பது ஜெயாவின் புன்னகை, அடுத்து அவர் கொடுக்கும் டீ. இரண்டிலுமே அன்பும் பாசமும் எப்போதும் தூக்கலாகவே இருக்கும்.

இழப்புகள் என்பவை வாழ்வின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஜெயாவுக்கோ அவர் சந்தித்த இழப்புகள்தாம் அவரை இரும்பு மனுஷியாக்கியிருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick